செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக 45 வீரர்கள் தேர்வு!…

2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக 45 வீரர்கள் தேர்வு!…

2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக 45 வீரர்கள் தேர்வு!… post thumbnail image
புதுடெல்லி:-2016ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்க வேட்டைக்கு தயாராகும் வகையில் பதக்க வாய்ப்பு உள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நவீன பயிற்சி வசதிகளை அளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. வீரர்களின் பயிற்சிக்காக ரூ.30 கோடி செலவிடப்பட இருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் திட்டத்திற்கு இதுவரை 45 வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. பேட்மிண்டன் போட்டிக்கு சாய்னா, சிந்து, காஷ்யப், ஸ்ரீகாந்த், குருசாய்தத், பிரணாய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த திட்டத்தில் தங்களையும், சேர்க்க வேண்டும் என்று பேட்மிண்டன் இரட்டையர் வீராங்கனைகளான ஜூவாலா கட்டா, அஸ்வினி ஆகியோர் விடுத்த வேண்டுகோள் கவனத்தில் கொள்ளப்படும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி