மோடியுடன் நவாஸ் ஷெரிப் தொலைபேசியில் பேச்சு!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் நிகழ்ந்த 7.9 ரிக்டர் அளவிலான பூகம்பத்தால் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டு உள்பட பல நகரங்கள் உருக்குலைந்தன. இதில் நேற்று வரை 5000-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 11000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்நாட்டுக்கு உதவும் வகையில் இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் காத்மாண்டுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சென்ற மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கிய பலரையும் உயிருடன் மீட்டதுடன், தொடர்ந்து தங்களது மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் நமது நாட்டிலும் எதிரொலித்தது. இதன் காரணமாக இங்குள்ள பீகார், உ.பி., மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறிப்பாக பீகாரில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்நிலையில் இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய நவாஸ் ஷெரிப், நேபாளத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் மீட்பு பணிகளை வெகுவாக பாராட்டினார். மேலும் நிலநடுக்கத்தால் இந்தியாவில் பலர் பலியானதற்கும் இரங்கல் தெரிவித்தார். அவரது கனிவான வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட பிரதமர் மோடி, சார்க் நாடுகள் இணைந்து பேரிடர் மீட்பு பயிற்சி மெற்கொள்ள வேண்டும் என்று யோசனையையும் முன்வைத்தார். மோடியின் யோசனையை பாராட்டிய ஷெரிப், நாம் அதற்கான முயற்சியை மேற்கொள்வோம் என்று பதிலளித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: