நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு சிம்பு கொடுக்கும் பரிசு!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வாலு’. நீண்டகால தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தை மே 9-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, அஜித்துடைய பிறந்தநாளில்தான் தன்னுடைய படத்தை வெளியிட திட்டமிட்டார்.

ஆனால், ‘உத்தமவில்லன்’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்கள் அன்றைய தேதியில் வெளிவருவதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இருந்தாலும் தன்னுடைய தலைவரின் பிறந்தநாளுக்கு ஏதாவது ஒன்றை புதுமையாக செய்யவேண்டும் என்று நினைத்த சிம்பு, தற்போது அஜித் பிறந்தநாளில் ‘வாலு’ படத்தின் மற்றொரு டிரைலரை வெளியிடவிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: