‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை இயக்கும் ராகவா லாரன்ஸ்!…

விளம்பரங்கள்

சென்னை:-ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘காஞ்சனா-2’ ரசிகர்கள் மத்தியிலும், சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பெரிதும் பேசப்பட்டது. இப்படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸை பாராட்டினார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

அதாவது, ரஜினியை சந்தித்து பாராட்டுக்களை பெற்றுக்கொண்ட ராகவா லாரன்ஸ், ரஜினியை வைத்து ஒரு படத்தையாவது இயக்கிவிட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்தாராம். அவரது விருப்பத்துக்கு ரஜினியும் ஒப்புதல் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறாராம். இப்படத்தை முடித்துவிட்டு ராகவா லாரன்ஸ் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: