அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…

டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…

டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!… post thumbnail image
புதுடெல்லி:-டுவிட்டரில் இணைந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் அவர்களை பின்தொடருபவர்கள் (பாலோவர்கள்) தொடர்பாக சமீபத்தில் ‘டுவிட்டர் டிப்ளோமசி- 2015’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 24-ந்தேதி வரை கணக்கிடப்பட்டு உள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, டுவிட்டர் பயன்படுத்தும் உலக தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோடியே 9 லட்சத்து 2 ஆயிரத்து 510 பாலோவர்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். மே 2014 தேர்தலுக்கு பிறகு மோடி டுவிட்டர் பாலோவர்கள் எண்ணிக்கை உலக தலைவர்கள் வரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா 5 கோடியே 69 லட்சத்து 33 ஆயிரத்து 515 பாலோவர்கள் கொண்டுள்ளார். போப் பிரான்சிஸ் 1 கோடியே 95 லட்சத்து 80 ஆயிரத்து 910 பாலோவர்கள் கொண்டுள்ளார். இவருக்கு 9 பல்வேறு மொழிகளில் டுவிட்டர் கணக்கு உள்ளது. வெளி விவகாரத்துறை மந்திரிகளில் அதிக பாலோவர்களுடன் சுஷ்மா சுவராஜ் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு 2 கோடியே 4 லட்சத்து 38 ஆயிரத்து 228 பாலோவர்கள் உள்ளனர். இவரை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டின் வெளிவிவகார துறை மந்திரி அப்துல்லா பின் சயித் 1 கோடியே 6 லட்சத்து 8 ஆயிரத்து 831 பாலோவர்களையும், துருக்கியை சேர்ந்த மேவ்லட் கவுசோகுலு 3,76,429 பாலோவர்களையும் கொண்டு உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி