நாசாவின் வேற்று கிரகவாசிகளை தேடும் திட்டம் தொடங்கப்பட்டது!…

விளம்பரங்கள்

வாஷிங்டன்:-வேற்று கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி திவீரமாக ஆய்வு செய்யபடும். இதற்காக அமைக்கபட்டுள்ள குழுவில் உலகம் முழுவதிலுமிருந்து 12 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர்.

நாசாவின் விண்வெளி தொலைநோக்கி கெப்லர் இதுவரை, 1,000 க்கும் மேற்பட்ட வேற்றுக கிரகங்களை கண்டறிந்துள்ளது. இவற்றில் அளவில் பூமி போன்று உள்ள 5 கிரகங்களில் உயிர்கள் வசிக்க கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவ்கிரகளை கடந்து வரும் ஒளி கதிர்களை ஆராய்வதன் மூலம் அந்த கிரகங்களை பற்றி தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: