நடிகை ஆண்ட்ரியாவை சமாதானப்படுத்திய கமல்ஹாசன்!…

விளம்பரங்கள்

சென்னை:-உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்களை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு ஒரு விஷயம் பளிச்சென புரியும். அப்படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் கமல்ஹாசனே நிறைந்திருக்கிறார். உத்தமவில்லன் படத்தின் விளம்பரங்கள் அனைத்தும் கமலின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளிவருவதால், அவரது முகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கமலுக்கு அடுத்தபடியாக உத்தமவில்லன் விளம்பரங்களில் இடம் பெற்றிருப்பது பூஜா குமார்தான்.

உத்தமவில்லன் படத்தின் இன்னொரு நாயகியான ஆண்ட்ரியாவை பப்ளிசிட்டியில் ஒட்டுமொத்தமாகவே ஓரங்கட்டிவிட்டனர். தன்னை ஓரங்கட்டியதால் மனசுக்குள் கருவிக்கொண்டிருந்தார் ஆண்டரியா. அதற்கு தக்க பதிலடி கொடுக்க சமயம் பார்த்து காத்திருந்தார். உத்தமவில்லன் மே 1 அன்று ரிலீஸ் ஆவதால் படத்தின் புரமோஷனுக்காக டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுக்க அழைத்தனர்.

ஆண்ட்ரியா வர முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை கமலிடம் சொல்வோம் என்றெல்லாம் அன்பாக சொல்லியும்….யார்கிட்ட வேணாலும் சொல்லிக்கோங்க… ஸாரி என்று கடுப்படித்திருக்கிறார். கடைசியில் கமலே ஆண்ட்ரியாவிடம் பேசி, அவரை கன்வின்ஸ் செய்து டிவிக்கு பேட்டி கொடுக்க சொல்லி இருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: