டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிக் தொடர்ந்து முதலிடம்!…

விளம்பரங்கள்

மாட்ரிட்:-ஏடிபி சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிட்டது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக் 13845 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இவர் கடந்த 144 வாரங்களாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் 8385 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

6060 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் ஆண்டி முர்ரேவும், 5390 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் ரபேல் நடாலும் உள்ளனர். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் வாவ்ரிங்கா 3495 புள்ளிகளுடன் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கெய் நிஷிகோரி (ஜப்பான்), மிலோஷ் ரயோனிக் (கனடா), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), டேவிட் பெரர் (ஸ்பெயின்) முறையே 5, 6, 7 மற்றும் 8-வது இடங்களைப் பிடித்துள்ளனர். குரோஷிய வீரர் மரின் சிலிக் 10-வது இடத்தில் உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி