டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-டுவிட்டரில் இணைந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் அவர்களை பின்தொடருபவர்கள் (பாலோவர்கள்) தொடர்பாக சமீபத்தில் ‘டுவிட்டர் டிப்ளோமசி- 2015’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 24-ந்தேதி வரை கணக்கிடப்பட்டு உள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, டுவிட்டர் பயன்படுத்தும் உலக தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோடியே 9 லட்சத்து 2 ஆயிரத்து 510 பாலோவர்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். மே 2014 தேர்தலுக்கு பிறகு மோடி டுவிட்டர் பாலோவர்கள் எண்ணிக்கை உலக தலைவர்கள் வரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா 5 கோடியே 69 லட்சத்து 33 ஆயிரத்து 515 பாலோவர்கள் கொண்டுள்ளார். போப் பிரான்சிஸ் 1 கோடியே 95 லட்சத்து 80 ஆயிரத்து 910 பாலோவர்கள் கொண்டுள்ளார். இவருக்கு 9 பல்வேறு மொழிகளில் டுவிட்டர் கணக்கு உள்ளது. வெளி விவகாரத்துறை மந்திரிகளில் அதிக பாலோவர்களுடன் சுஷ்மா சுவராஜ் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு 2 கோடியே 4 லட்சத்து 38 ஆயிரத்து 228 பாலோவர்கள் உள்ளனர். இவரை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டின் வெளிவிவகார துறை மந்திரி அப்துல்லா பின் சயித் 1 கோடியே 6 லட்சத்து 8 ஆயிரத்து 831 பாலோவர்களையும், துருக்கியை சேர்ந்த மேவ்லட் கவுசோகுலு 3,76,429 பாலோவர்களையும் கொண்டு உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: