கைவிரலில் காயம்: 2 போட்டிகளில் அஸ்வின் ஆடமாட்டார்!…

விளம்பரங்கள்

சென்னை:-கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணியின் வீரர் அஸ்வின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அவர் 2 ஓவர் வீசி 5 ரன் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது பந்துவீச்சில் ராபின் உத்தப்பா, மணிஷ் பாண்டே ஆட்டம் இழந்தனர். இதில் ராபின் உத்தப்பா சிறப்பாக ஆடி கொண்டிருந்தார்.

12–வது ஓவரில் பீல்டிங்கின் போது அஸ்வின் காயம் அடைந்தார். சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை அவர் கேட்ச் பிடிக்க முயன்றபோது வலது கைவிரலில் காயம் ஏற்பட்டது. அந்த கேட்ச்சை அவர் தவறவிட்டார். இதையடுத்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் அவர் பந்துவீச வரவில்லை. அவருக்கு கைவிரலில் ஸ்கேன் செய்து பார்க்கப்படுகிறது. இதையடுத்து அவருக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்து இருப்பதால் அடுத்த 2 ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: