செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு மலேசிய பேட்மிண்டன் வீரர் லீக்கு 8 மாதம் தடை!…

மலேசிய பேட்மிண்டன் வீரர் லீக்கு 8 மாதம் தடை!…

மலேசிய பேட்மிண்டன் வீரர் லீக்கு 8 மாதம் தடை!… post thumbnail image
கோலாலம்பூர்:-உலக பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து 199 வாரங்கள் வகித்த மலேசியாவின் முன்னணி வீரர் லீ ஷோங் வெய், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்தாவில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் சீன வீரர் ஷென் லாங்கிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

உலக போட்டியில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் லீ ஷோங் வெய் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் லீ ஷோங் வெய் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். லீயின் ஊக்க மருந்து விவகாரம் குறித்து உலக பேட்மிண்டன் சம்மேளனத்தில் 3 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் நேற்று லீக்கு முன் தேதியிட்டு 8 மாத காலம் தடை தண்டனை விதிக்கப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஏமாற்றும் நோக்குடன் லீ வேண்டுமென்றே ஊக்க மருந்தை உட்கொள்ளவில்லை என்றும் அஜாக்கிரதையால் இந்த தவறு நேர்ந்ததை கருத்தில் கொண்டு லீயின் தண்டனையில் கடுமை காட்டப்படவில்லை என்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. 32 வயதான லீயின் 8 மாத தடை இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி முதல் லீ சர்வதேச போட்டியில் பங்கேற்க முடியும். இதனால் 2016-ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் (பிரேசில்) நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் லீ விளையாட வாய்ப்பு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி