செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்ட ராணி எலிசபெத்!…

கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்ட ராணி எலிசபெத்!…

கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்ட ராணி எலிசபெத்!… post thumbnail image
இங்கிலாந்து:-இங்கிலாந்தின் மிகப்பெரிய 1000 கோடீஸ்வரர்களின் பட்டியலை அங்குள்ள பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டு உள்ளது. இதில் உக்ரைனில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் லென் பிலவாட்னிக் என்பவர் முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 1317 கோடி பவுண்டு ஸ்டெர்லிங் (சுமார் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கோடி) ஆகும்.

இந்த பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்திருந்த இந்திய வம்சாவளி இந்துஜா சகோதரர்கள், இந்த ஆண்டு 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களது சொத்து மதிப்பு 1300 கோடி பவுண்டு ஆகும். இந்த செல்வந்தர்கள் பட்டியலில் இங்கிலாந்து ராணி எலிசபெத், கடந்த ஆண்டை விட பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளார். பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த ஆண்டு மிகவும் வளர்ச்சியில் இருந்த போதும், ராணி எலிசபெத்தால் முதல் 300 இடங்களுக்குள் கூட வரமுடியவில்லை. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது சொத்து மதிப்பு வெறும் 34 கோடி பவுண்டு ஆகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி