ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறவை மோதியது!…

விளம்பரங்கள்

ஸ்ரீநகர்:-ஜம்முவில் இருந்து 176 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் புறப்பட்ட SG160 என்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தபோது விமானத்தின் மீது பறவை மோதியது. இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்திருந்ததால் அதன் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள் கூறுகையில், காலை 11.10 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பறவை மோதியதால் விமானத்தின் மூக்குப்பகுதி சேதமடைந்திருக்கிறது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியிலிருந்து வரும் இன்ஜினீயர்கள் சரி செய்ய் உள்ளனர் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி