நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: நிபுணர்கள் தகவல்!…

விளம்பரங்கள்

காத்மாண்டு:-இமயமலை பகுதியில் உள்ள நேபாளத்தில் கடந்த 25–ந்தேதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் உள்ளிட்ட பெரும் பாலான இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்து தரை மட்டமாயின.இடிபாடுகளுக்குள் சிக்கி ஏராளமானவர்கள் பலியாகினர். இதுவரை 4,310 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் பிணங்கள் கிடக்கின்றன. எனவே பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. மேலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேபாளத்தில் மீட்பு பணியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. மேலும் அங்கு சிக்கியிருக்கும் வெளிநாட்டினரை அந்தந்த நாட்டினர் மீட்டு செல்கின்றனர்.நேபாளத்தில் இதற்கு முன்பு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தற்போது உலகின் மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் அருகே நிலநடுக்கம் உருவாகியுள்ளது.பூமியின் மிகப்பெரிய 2 ராட்சத நிலத்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று அதிவேகமாக மோதிக் கொண்டதால் ஏற்பட்டதாகவும். இது 80 ஆண்டுகளில் ஏற்கனவே உருவான நிலநடுக்கங்களை விட மிகப்பெரியதாகும்.

தொடக்கத்தில் 7.8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதுவே மிகப்பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த பூகம்பம் 20 அணுகுண்டுகள் வெடித்ததற்கு சமம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜப்பானின் ஹிரோசிமா நகரில் வீசிய அணுகுண்டை விட சக்தி வாய்ந்ததாக இது கருதப்படுகிறது. மேலும் இந்த பூகம்பம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கில் 40 மைல் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அதுவும் 10 முதல் 15 கி.மீட்டர் ஆழத்தில் இருந்து தாக்கியுள்ளது. இதனால்தான் அதிக அளவு அதிர்வு ஏற்பட்டு சேதமதிப்பு அதிகரித்துள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: