நடிகை திரிஷாவின் திருமணம் ரத்து?…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியிலும் நடித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராணாவையும் திரிஷாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. பிறகு இவர்களுடைய உறவு முறிந்து, இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தமிழ் பட தயாரிப்பாளரும் தொழில் அதிபருமான வருண்மணியனுக்கும் திரிஷாவுக்கும் கடந்த ஜனவரி 23–ந்தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. வருண்மணியன் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ படங்களை தயாரித்துள்ளார்.

அடுத்து திரிஷாவை கதாநாயகியாக வைத்து புதுப்படம் எடுக்க தயாரானார்கள். இந்த படத்தை டைரக்டர் திரு இயக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த படத்தில் இருந்து திரிஷா திடீரென விலகிவிட்டார். அதற்கான காரணம் என்னவென்று தெரியாமலே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் திரிஷா– வருண்மணியன் கடும் மோதல் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. இதனாலேயே வருண்மணியன் தயாரிக்கும் படத்திலிருந்து திரிஷா விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், முன்பெல்லாம் விருந்து நிகழ்ச்சிகளில் வருண்மணியனுடன் ஜோடியாக கலந்துகொள்ளும் திரிஷா இப்போது தனியாகவே வருகிறாராம். சமீபத்தில் வருண்மணியனின் குடும்ப நிகழ்ச்சியொன்று நடந்துள்ளது. இதில் அவருடைய உறவினர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் திரிஷா மட்டும் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் பிரிவுக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. ஆனாலும் இருவருக்கும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கிறதாம். இருவருக்கும் பொதுவான நண்பர்களும் உறவினர்களும் இதில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: