42வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின் தெண்டுல்கர்!…

விளம்பரங்கள்

மும்பை:-இந்திய கிரிக்கெட்டின் இமயமும், சாதனை நாயகனுமான சச்சின் தெண்டுல்கருக்கு நேற்று 42-வது வயது பிறந்தது. அவர் பிறந்த நாளை மும்பையில் தனது குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார். சதத்தில் சதம் கண்டவரான சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், அவரது தாக்கம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் சற்றும் குறையவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக செயல்பட்டு வரும் தெண்டுல்கர், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்கான கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளராகவும் விளங்கி வருகிறார். பிறந்த நாளையொட்டி சச்சின் தெண்டுல்கருக்கு, உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமூக வலை தளங்கள் மூலமாக அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்தன. அவரும் தன்னை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி