அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…

ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…

ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!… post thumbnail image
கொழும்பு:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று அதிபரானார். அதை தொடர்ந்து ராஜபக்சே ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள், அதிகார அத்து மீறல்கள் வெளியாகி வருகின்றன. ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே ரூ.3 கோடியே 29 லட்சம் நிதி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். இவர் ராஜபக்சேவின் ஆலோசகராகவும், பொருளாதார அபிவிருத்தி துறை மந்திரியாகவும் இருந்தார். மற்றொரு தம்பி கோத்தபய ராஜபக்சேவும் ஊழல் தடுப்பு கமிஷன் விசாரணையின் கீழ் உள்ளார்.

இவர் ராஜபக்சே அரசில் அதிகாரம் மிக்க ராணுவ மந்திரியாக இருந்தார். ராஜபக்சே மீதும் ஊழல் தடுப்பு கமிஷன் வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் கமிஷன் முன்பு தான் ஆஜராக முடியாது என மறுத்து விட்டார்.கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பசில் ராஜபக்சேவை பார்க்க வந்த மகிந்த ராஜபக்சே சிறிசேனா அரசு மீது குற்றம் சாட்டினார். தனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் வழக்குகளில் சிக்க வைத்து விடுவார்கள் என அச்சம் தெரிவித்தார்.இந்நிலையில் அவரது மனைவி ஷிரந்தியின் வங்கி கணக்குகளும் சோதனையிடப்பட உள்ளன. சிரிலிய சவிய வங்கியில் ஷிரந்தி பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டன.

அந்த கணக்குகளில் பணம் போடப்பட்டு காசோலைகளை பயன்படுத்தி பல்வேறு வங்கி கிளைகளில் பணமாக்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. அதற்கான விசாரணைகளை தொடங்க அனுமதி வழங்குமாறு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை ஏற்றுக் கொண்ட கோர்ட்டு வங்கி கணக்குகளை சோதனை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி