செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு சோலார் மின்சார வசதி கொண்ட உலகின் முதல் கிரிக்கெட் மைதானம்!…

சோலார் மின்சார வசதி கொண்ட உலகின் முதல் கிரிக்கெட் மைதானம்!…

சோலார் மின்சார வசதி கொண்ட உலகின் முதல் கிரிக்கெட் மைதானம்!… post thumbnail image
பெங்களூர்:-பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சூரியஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. 400 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக தகடுகளை ஸ்டேடியத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ.4½ கோடியாகும்.

இந்த சூரியஒளி மின் உற்பத்தி மூலம் தினசரி 1,700 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இந்த சூரிய ஒளி மின்சாரம் மூலம் ஆண்டுக்கு ரூ.70 முதல் 80 லட்சம் வருமானம் கிடைக்கும். உலகின் வேறு எந்த கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் சூரிய ஒளி மின்சார வசதி அமைக்கப்படவில்லை. சோலார் மின்சார வசதி கொண்ட முதல் ஸ்டேடியம் என்ற பெருமையை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் பெறுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி