செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது!…

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது!…

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது!… post thumbnail image
சென்னை:-ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 குறைந்தது.சில நாட்களாக தங்கம் விலை ஏறி இறங்கி வருகிறது. கடந்த 22–ந்தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 336 ஆக இருந்தது மறுநாள் 23–ந்தேதி பவுனுக்கு ரூ.134 குறைந்து ரூ.20 ஆயிரத்து 192 ஆக விற்றது. நேற்று மீண்டும் பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.20 ஆயிரத்து 352 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 184 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.2,523–க்கு விற்கிறது.

சர்வதேச சந்தை நிலவரப்படி விலை குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் பங்கு சந்தையில் முதலீடு அதிகரித்துள்ளதாலும் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
வெள்ளியும் கிலோவுக்கு ரூ.260 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.36 ஆயிரத்து 220 ஆகவும், ஒரு கிராம் ரூ.38.80 ஆகவும் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி