யூ-டியூபில் வைரல் ஹிட்டான டெல்லி ஐஐடி மாணவர்களின் கலக்கல் காமெடி நடனம்!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-பிரபல பாப் பாடகி ’ரே ஜெப்சனின்’ மெகா ஹிட் வீடியோ ஆல்பம் ‘Call Me, Maybe’. இந்த ஆல்பத்தில் ’பீச் பிகினி’ உடை அணிந்து வரும் மாடல்கள் கவர்ச்சி நடனமாடி இந்த ஆல்பத்தின் பெயரை, பாத்ரூம் ஷவர், ஓடும் பேருந்து, நீச்சல் குளத்தின் உள்ளே, என்று வித விதமான லொகேஷன்களில் பாடவும் செய்வர்கள்.

3.5 நிமிடம் ஓடும் இந்த வீடியோவை ஃப்ரேம் பை ஃப்ரேமாக அப்படியே காப்பி அடித்து சட்டை அணியாமல் கவர்ச்சி மாடல்களைப் போல் நடனமாடும் ஐஐடி மாணவர்களின் அடாவடி அட்ராசிட்டிதான் இந்த வீடியோவின் ஹை லைட். டெல்லி கரகோரம் ஐஐடி கேம்பசில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் ’ஹவுஸ் டே’ எனப்படும் விழாவை முன்னிட்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி யூ-டியூபில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் நினைத்து நினைத்து சிரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: