மிகவும் எதிர்பார்க்கப்படும் பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் 5ம் பாகத்தின் பர்ஸ்ட் லுக்!…

விளம்பரங்கள்

ஹாலிவுட்:-திரைப்பட ரசிகர்களால் மறக்கமுடியாத கதாபத்திரம், “பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்” படங்களில் நடித்த கேப்டன் ஜாக் ஸ்பேரோ. கேப்டன் ஜாக்காக சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்தவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டேப். மிகவும் சாதாரண நடிகராக அறியப்பட்ட அவர், பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் படங்களில் நடித்த பிறகு அழியாப் புகழ் பெற்றுவிட்டார்.

இதுவரை 4 பாகங்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தின் 5-வது பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தின் புகைப்படத்தை அதன் தயாரிப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பேரோவை, இருவர் பெரிய கயிற்றால் கட்டியப்படி இருக்க, அவர் தனது வழக்கமான குறும்பு பார்வையுடன் உள்ளார். இதுவரை வந்துள்ள எல்லா படங்களிலும் கேப்டன் ஜாக் ஸ்பேரோ எதிரிகளிடம் மாட்டிக்கொண்ட பிறகு தந்திரமாக தப்பிக்கும் காட்சிகள் படு சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருக்கும். அதேபோல் இந்தப்படத்திலும் கேப்டன் ஜாக் ஸ்பேரோ எதிரிகளிடமிருந்து தப்பிவிடுவார் என அவரது தீவிர ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறிவருகிறார்கள். இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது கிடைத்துள்ள தகவலின் படி 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: