பாகிஸ்தானின் பிரபல கஸல் பாடகர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான கஸல் பாடகர் குலாம் அலி (வயது 74). தனது 6-வது வயது முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர் பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான கஸல் பாடகர்களில் ஒருவராவார். இந்திய மொழிகளில் வெளியான சில திரைப்படங்களிலும் பாடியுள்ள குலாம் அலி, பிரதமர் மோடியின் பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ள சங்கத் மோச்சன் ஆலயத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக சமீபத்தில் இந்தியா வந்தார்.

டெல்லி வந்த அவர் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி, குலாம் அலியுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் இருவரும் நிறைய விவகாரங்கள் தொடர்பாக பேசினோம் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: