நயன்தாரா, ஸ்ருதியை பின்னுக்கு தள்ளிய நடிகை எமி ஜாக்சன்!…

விளம்பரங்கள்

சென்னை:-சமீபத்தில் விரும்பத்தக்க நடிகர் என்று ஒரு கருத்துக்கணிப்பை பிரபல இணையதளம் ஒன்று நடத்தியது. இதில் அஜித் முதல் இடத்தில் இருக்கிறார் என்று அறிவித்தனர். இந்நிலையில் அடுத்ததாக விரும்பத்தக்க நடிகை என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி எமிஜாக்சன் முதலிடம் பிடித்தார். இவரின் நடிப்பில் வெளியான ஐ படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், விக்ரமைப் போலவே இவரது நடிப்பும், கவர்ச்சியும் அனைவரையும் கவர்ந்தது. இந்த பட்டியலில் ஸ்ருதிஹாசன் 2வது இடத்தையும் சமந்தா 3வது இடத்தையும் தமன்னா 4வது இடத்தையும் பிடித்தனர். நயன்தாரா 7வது இடத்திலும், ஹன்சிகா 10வது இடத்திலும், த்ரிஷா 11வது இடத்திலும் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: