டெல்லியில் முதல் முறையாக பிரதமர் மோடியின் மெட்ரோ ரெயில் பயணம்!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-பிரதமர் மோடி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் காரில் சென்று கலந்து கொள்வது வழக்கம். அவர் செல்லும் போது ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்படும் இந்த நிலையில் இன்று டெல்லியில் நடந்த தேசிய புலனாய்வு அகாடமி நிகழ்ச்சிக்கு காரில் செல்லாமல் மெட்ரோ ரெயிலில் சென்று கலந்து கொண்டார். இதற்காக அவர் தவுலா கான் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து துவாரகர் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். 12 நிமிட பயண நேரத்தில் துவாரா சென்றார்.

அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். இது பற்றி மோடி தனது டுவிட்டரில், ஸ்ரீதரன் மெட்ரோ ரெயில் பயண அனுபவம் பற்றி அடிக்கடி என்னிடம் சொல்வார். இன்று துவாரகா சென்ற போது எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. உண்மையிலேயே மகிழ்ச்சியான பயணமாக இருந்தது. டெல்லி மெட்ரோவுக்கு நன்றி. ஸ்ரீதரன் ஜி–க்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதரன் டெல்லி மெட்ரோ ரெயில் தலைவராக இருந்தார். மெட்ரோ ரெயில் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் ஸ்ரீதரன் என்பதால் அவர் ‘மெட்ரோ மேன்’ என அழைக்கப்பட்டார். இன்று பிரதமர் மோடி மெட்ரோ ரெயில் பயணத்தை அனுபவித்து ஸ்ரீதரனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: