அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…

விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…

விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.விவசாயி கஜேந்திரசிங் தூக்கு போட்டுக்கொள்ள ஆம்ஆத்மி தொண்டர்கள் தான் கை தட்டி தூண்டி விட்டனர் என்று போலீசார் கூறுகிறார்கள். இதற்கு ஆம்ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆம்ஆத்மி தலைவரும் டெல்லி முதல்–மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயி தற்கொலை தொடர்பாக மன்னிப்புக்கேட்டுள்ளார். இது குறித்து அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:–

ஆம்ஆத்மி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதும் நான் உடனே பேரணியை ரத்து செய்து இருக்க வேண்டும். அப்படி செய்யாதது நான் செய்த மிகப்பெரிய தவறாகும்.விவசாயி ஒருவர் தூக்கு போட்டுக்கொண்டார் என்று என்னிடம் கூறிய பிறகு நான் என் பேச்சை தொடர்ந்திருக்கக்கூடாது. அப்படி நான் நடந்து கொண்டது யார் மனதையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.விவசாயி தற்கொலை தொடர்பாக டெல்லி போலீசார் நடத்தி வரும் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளேன். இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி தொண்டர்களை குறை கூறுவது தவறு. தேவைப்பட்டால் டெல்லி போலீசார் என்னை அழைத்தால், அவர்கள் முன்பு ஆஜராகி நான் விளக்கம் அளிப்பேன். டெல்லி போலீசார் இந்த விஷயத்தில் நேர்மையான பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும்.

விவசாயி கஜேந்திரசிங் தற்கொலை விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்கள் போலீஸ்காரர்களாக இருந்தாலும் சரி, ஆம்ஆத்மி தொண்டர்களாக இருந்தாலும் சரி, உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும். டெல்லியில் மாநில அரசும் மாஜிஸ்திரேட் மூலம் தனி விசாரணை நடத்துகிறது. இனி கஜேந்திரசிங் தற்கொலையை அரசியல் ஆக்குவதை கைவிட்டுவிட்டு, அவர்களுக்கு பயிர் சேதத்துக்கு எத்தகைய கூடுதல் இழப்பீடு கொடுக்கலாம் என்று ஆலோசனை நடத்தி முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி