அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மேற்கு வங்கத்தில் 6 நகரங்களின் பெயர் மாற்றம்!…

மேற்கு வங்கத்தில் 6 நகரங்களின் பெயர் மாற்றம்!…

மேற்கு வங்கத்தில் 6 நகரங்களின் பெயர் மாற்றம்!… post thumbnail image
கொல்கத்தா:-மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 6 நகரங்களின் பெயர்கள் நேற்று மாற்றப்பட்டன. இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சிலிகுரி நகரின் பெயர் தீஸ்தா என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீஸ்தா என்பது மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப் பகுதியில் ஓடும் நதியின் பெயராகும். போல்பூர் நகரின் பெயர் கீதாபிதான் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயர் ரவீந்திரநாத் தாகூரின் பாடல் வரிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ‘‘அசான் சோல் – துர்காபூர்’’ என்ற இரட்டை தொழில் நகரங்கள் உள்ளன. இந்த இரட்டை நகரங்களின் பெயர் ‘‘அக்னி பீணா’’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பெயரை பிரபல கவிஞர் காஜி நஜ்ரூல் இஸ்லாம் என்பவரின் கவிதை வரியில் இருந்து மம்தா பானர்ஜி தேர்வு செய்துள்ளார்.மால்டா மாவட்டத்தில் உள்ள கஜல்தோபா நகரின் பெயர் ‘‘முக்தா தீர்த்தா’’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா அருகில் உள்ள கரியா நகரின் பெயர் ‘‘உத்தம்சிட்டி’’ என்று மாற்றப்பட்டுள்ளது.ஒடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணி என்ற நகரின் பெயர் சம்ரித்தி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா அருகில் 7–வதாக புதிய சாடிலைட் நகரம் ஒன்றை மம்தா பானர்ஜி உருவாக்கியுள்ளார்.அந்த புதிய சாடிலைட் நகரத்துக்கு ‘‘விஸ்வ பெங்கால்’’ என்று மம்தா பெயர் சூட்டி உள்ளார். இந்த பெயர் மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி