நல்லது செய்ய போன நடிகர் அஜித்திற்கு வந்த சோதனை!…

விளம்பரங்கள்

சென்னை:-திரையுலகில் யாருக்கு என்ன உதவி வேண்டும் என்று தெரிந்தால் நடிகர் அஜித் தானாக முன்வந்து உதவக்கூடியவர். இவரை பற்றி தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்று கவர் ஸ்டோரி எழுதியுள்ளது. இதில் அஜித் படப்பிடிப்பில் எப்படி?… என்று ஒரு பகுதியில் பல உணர்ச்சிப்பூர்வமான தகவலை கூறியுள்ளனர். ராமன் அப்துல்லா என்ற படம் வெளிவந்த நேரம் சில காரணங்களால் தமிழ் திரையுலகிற்கு, பெப்சிக்கும் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் பெப்சிக்கு முதல் முதலாக குரல் கொடுத்தவர் அஜித் தானாம்.

இந்நிலையில் ஒரு பிரமாண்ட படத்தில் அஜித்தை ஹீரோவாக வைத்து ஒரு பிரபல தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், இந்த பிரச்சனையை காரணம் காட்டி, அஜித்தை அந்த படத்திலிருந்து தூக்கினார் தயாரிப்பாளர். பிறகு அதே தயாரிப்பாளர் பெரிய கஷ்டத்தில் இருக்கும் போது எந்த நடிகரும் அவருடைய தயாரிப்பில் நடிக்க முன்வராத போது, அஜித் நான் நடிக்கிறேன் என்று தொடந்து 3வது படம் நடித்து கொடுக்கிறார். அந்த தயாரிப்பாளர் யார் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அஜித் எந்த பிரச்சனைக்கும் அறிக்கை கொடுக்காமல் இருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: