நடிகர் விஜய் கதாபாத்திரத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…

விளம்பரங்கள்

சென்னை:-பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த திரைப்படம் இதுவரை தமிழில் உருவாகாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஷங்கர் தயார் செய்த கதைக்கு முதலில் அவர் தேர்வு செய்த நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரம். ஆனால் ரஜினி தனது அடுத்த படத்தை ஷங்கர் இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதனால் ஷங்கர் விஜய் நடிக்கவிருந்த கேரக்டருக்கு ரஜினியும் விக்ரம் நடிக்கவிருந்த கேரக்டருக்கு கமல்ஹாசனையும் வைத்து படமாக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இந்த பிரம்மாண்டமான படத்தை லைகா இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் கமல் நடிக்க மறுப்பு தெரிவித்ததாகவும், அதனால் ஷங்கர் மீண்டும் அந்த கேரக்டரில் விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஷங்கரின் அன்னியன், ஐ போன்ற படங்களில் விக்ரம் நடித்துள்ளார் என்பதால் அவர் மீண்டும் ஷங்கர் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என கூறப்படுகிறது. ரஜினி, விக்ரம், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் ஆகிய பிரபலங்கள் இணையும் இந்த படத்தின் பட்ஜெட் கண்டிப்பாக ரூ.150 கோடியை தாண்டிவிடும் என கோலிவுட்டில் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: