சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் ரூ.5 லட்சம் தான் – சீனிவாசன்!…

விளம்பரங்கள்

மும்பை:-ஐ.பி.எல். அமைப்பின் முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு வெறும் 5 லட்சம் ரூபாய் என அந்த அணியின் உரிமையாளர்கள் மதிப்பிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் ஐ.பி.எல். அணியின் உரிமையாளராகவும் இருப்பதற்கு உச்சநீதி மன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் என்ற தனி நிறுவனத்தை உருவாக்கி, அந்த நிறுவனத்திற்கு சி.எஸ்.கே அணியை விற்றார். இதன் மூலம் அணியை விற்ற பிறகும் மறைமுகமாக அணியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

ஒரு ஐ.பி.எல். அணியை விற்கும் போது அதன் மொத்த விலையில் 5 சதவீதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணத் தொகையை குறைப்பதற்காக அணியின் விலையை ரூ.5 லட்சமாக குறிப்பிட்டு விற்பனை கட்டணமாக ரூ.25 ஆயிரம் மட்டும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள ஐ.பி.எல். ஆட்சிமன்றக் குழுவின் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடந்தது. அப்போது அணியின் மதிப்பை குறைத்துக் காட்டியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மதிப்பீட்டினை ஆட்சிமன்றக் குழு ஆட்சேபித்ததாகவும் தெரிகிறது. 2014-ம் ஆண்டு அமெரிக்க நிறுவனத்தின் கணிப்புபடி சென்னை அணியின் மதிப்பு 450 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: