தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்தது!…

விளம்பரங்கள்

சென்னை:-அட்சய திரிதியையொட்டி தமிழ்நாடு முழுவதும் தங்கம் விற்பனையில் சாதனையை படைக்கப்பட்டது. 3,500 கிலோ தங்கம் விற்பனையானது. அட்சய திரிதிக்கு மறுநாள் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. சவரனுக்கு ரூ.184 குறைந்தது.
இன்று காலை ஒரு கிராம் ரூ.2519–க்கும், சவரன் ரூ.20,152–க்கும் விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.38.60 ஆகவும், ஒரு கிலோ ரூ.36,100 ஆகவும் இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: