செய்திகள்,திரையுலகம் ‘குட்டி தல’க்கு தனித்துவமான பெயர் வைத்த நடிகர் அஜித்!…

‘குட்டி தல’க்கு தனித்துவமான பெயர் வைத்த நடிகர் அஜித்!…

‘குட்டி தல’க்கு தனித்துவமான பெயர் வைத்த நடிகர் அஜித்!… post thumbnail image
சென்னை:-அஜித்-ஷாலினி தம்பதிக்கு சமீபத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சென்னை தனியார் மருத்துவமனையில் பிறந்த இக்குழந்தைக்கு அஜித் ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரசிகர்கள் இந்த குழந்தைக்கு ‘குட்டி தல’ என செல்லமாக பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், சமீபகாலமாக இக்குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற தீவிர யோசனையில் அஜித்-ஷாலினி தம்பதியினர் ஈடுபட்டு வந்தனர். தற்போது அக்குழந்தைக்கு ஆத்விக் என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். ஆத்விக் என்றால் ‘தனிப்பட்ட’ என்று பொருள்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அவருடைய முதல் பெண் குழந்தைக்கு அனோஷ்கா என்று பெயர் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி