விவசாயி தற்கொலைக்கு பிரதமர் மோடி இரங்கல்!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் எழுதி இருப்பதாவது:- கஜேந்திர சிங்கின் மரணம், நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி விட்டது. நான் பெரிதும் நொறுங்கிப் போய்விட்டேன்.

அவருடைய குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கடினமான உழைக்கிற எந்த விவசாயியும் தன்னை தனி ஆளாக கருதக்கூடாது. விவசாயிகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கவே நாங்கள் ஒன்றாக பாடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: