விவசாயிகளின் வாழ்க்கையை விட நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை: மோடி பேச்சு!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும் அவரது தற்கொலை பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கஜேந்திராவின் தற்கொலை பற்றி கேள்வி கேள்வியெழுப்பப்பட்டதுடன், பிரதமர் மோடி இது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், விவசாயிகளின் வாழ்க்கையை தவிர நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை என்றார். இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில்;

விவசாயிகளின் பிரச்சனையில் உரிய தீர்வு காண நாம் உறுதி பூண்டுள்ளோம். நீண்ட காலமாகவே இப்பிரச்சனை நீடிக்கிறது. இது குறித்து அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் ஏற்றுக்கொள்வோம். விவசாயிகளை நாம் கைவிடக்கூடாது. அவர்களுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும். அவர்களின் குறைகளை கேட்டறிவதுடன், எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்கவேண்டும். நாம் பல கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தேசம் ஒன்று தான். எனவே அனைவரும் இணைந்து செயல்பட்டு விவசாயிகள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி தர முன்வரவேண்டும் என்று மோடி உரையாற்றினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: