நடிகர் விஜய்க்காக கோவா சென்ற அட்லீ, ஜிவி!…

விளம்பரங்கள்

சென்னை:-‘புலி’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் ஆக்ஷன் ப்ளஸ் ரொமான்ஸ் கலந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் மீண்டும் சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார், அதேபோல் தலைவா படத்திற்கு பிறகு மறுபடியும் ஜி.வி.பிரகாஷ் விஜய்யின் (59வது) படத்திற்கு இசையமைக்கிறார்.

இது ஜி.வி.யின் 50வது படம் என்பது இன்னுமொரு சிறப்பு. தற்போது இப்படத்தின் பாடல்களை சூப்பர் ஹிட்டாக்க அட்லீயும், ஜிவியும் கோவா சென்றுள்ளனர். இவர்கள் விரைவில் விஜய் 59 படத்திற்கான சூப்பர் ட்யூன்களுடன் சென்னை திரும்பவிருக்கிறார்களாம். சைவம் பட புகழ் தேசிய விருது பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் இப்படத்தில் ஒரு பாடல் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: