‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை மட்டும் பின்தொடரும் விஷால்!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமா நடிகர்கள் ஒவ்வொருவரும் தன் சக நடிகர்கள் என்ன மாதிரியான படங்களில் நடிக்கின்றனர். எந்தமாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்கின்றனர் போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள ஆசைப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஒரு நடிகரின் படம் வெற்றி பெற்றால், அதில் அந்த நடிகர் எந்தமாதிரியான நடிப்பை வெளிப்படுத்தினார். அவருடைய நடிப்பை பின்பற்றி தன்னுடைய படத்தையும் வெற்றி பெற வைக்கவேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு நடிகரின் மனதிலும் இருந்து வருகிறது.

ஆனால், விஷாலோ எந்த நடிகரையும் பின்பற்றாமல், ரஜினியை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறார். விஷால் இவ்வாறு பின்தொடர்வது டுவிட்டரில்தான். அட, ஆமாங்க. சமீபத்தில்தான் விஷால் டுவிட்டரில் இணைந்தார். டுவிட்டரில் இணைந்தது முதல், தன்னுடைய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், தான் நடிக்கும் விளம்பரத்தின் டிரைலர் மற்றும் ரசிகர்களோடு நேரடியாக உரையாடுவது, படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்கள் என அனைவற்றையும் டுவிட் செய்து வருகிறார்.

இதுநாள் வரை விஷாலை 18 ஆயிரம் பேர் பின்தொடர்ந்துள்ளார்கள். ஆனால், விஷாலோ ஒருவரை மட்டும்தான் பின்தொடர்ந்துள்ளார். அந்த ஒருவர் யாரென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். மற்ற நடிகர், நடிகைகளை இதுவரை அவர் தொடரவில்லை. இதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை. ஒருவேளை படப்பிடிப்புகளில் தொடர்ந்து பிசியாக இருப்பதால், இதில் கவனம் செலுத்த தவறியிருக்கிறாரா?… என்பதும் தெரியவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: