செய்திகள்,திரையுலகம் 18 கோடியை தாண்டியது ‘காஞ்சனா 2’ படத்தின் வசூல்!…

18 கோடியை தாண்டியது ‘காஞ்சனா 2’ படத்தின் வசூல்!…

18 கோடியை தாண்டியது ‘காஞ்சனா 2’ படத்தின் வசூல்!… post thumbnail image
சென்னை:-ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய பேய் படங்கள் வரிசையில் ‘காஞ்சனா–2’ கடந்த வாரம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே வந்த ‘முனி’, ‘காஞ்சனா’ படங்கள் வசூல் சாதனை படைத்தன. அதுபோல் ‘காஞ்சனா–2’ படமும் வசூல் குவிக்கிறது.

படம் வந்த இரண்டு நாட்களில் ரூ.10 கோடியே 87 லட்சம் வசூலித்தது. தற்போது வசூல் ரூ.18 கோடியை தாண்டியது. அடுத்து தெலுங்கிலும் இப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர். வருகிற 24–ந் தேதி ஆந்திரா முழுவதும் தெலுங்கு மொழியிலேயே வெளியாகிறது. அங்கும் வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி