மேலும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு தலையில் காயம்!…

விளம்பரங்கள்

கொல்கத்தா:-சமீப காலமாக ஆடுகளங்களில் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் வீரர் ஹியூக்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவுன்சர் பந்து தாக்கி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகையே கடுமையாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளம் வீரர் அங்கீத் கேசரி பீல்டிங்கின் போது சக வீரருடன் எதிர்பாராத விதமாக மோதி விழுந்ததில் காயம் அடைந்து மரணம் அடைந்தார்.

இதற்கிடையே மேலும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொல்கத்தாவில் 2–வது டிவிசன் ‘லீக்’ போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று இந்தப்போட்டியின் போது பீல்டிங் செய்த ராகுல் கோஷ் (வயது23) என்ற வீரருக்கு காயம் ஏற்பட்டது. அவரது தலைப்பகுதியின் இடது புறம் காயம் ஏற்பட்டது. இதில் ரத்தம் கசிந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அவர் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 வாரம் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: