செய்திகள்,முதன்மை செய்திகள் இ-சிகரெட் புகைப்பதன் மூலம் புகைப்பழக்கம் குறைவதில்லை: ஆய்வில் தகவல்!…

இ-சிகரெட் புகைப்பதன் மூலம் புகைப்பழக்கம் குறைவதில்லை: ஆய்வில் தகவல்!…

இ-சிகரெட் புகைப்பதன் மூலம் புகைப்பழக்கம் குறைவதில்லை: ஆய்வில் தகவல்!… post thumbnail image
கலிபோர்னியா:-அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1000 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், புகைப்பழக்கத்தை கைவிடும் பொருட்டு இ-சிகரெட்டை பயன்படுத்தியவர்களில் 59 சதவீதம் பேர் புகைப்பழக்கத்தை கைவிடுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் 49 சதவீதம் பேர் புகைப்பழக்கத்தை குறைக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இ-சிகரெட் புகைப்பதன் மூலம் புகைப்பழக்கம் ஏன் குறைவதில்லை என்பது பற்றியும், இ-சிகரெட் புகைப்பவர்களுக்கு நிகோட்டின் தேவை அதிகரிப்பதாகவும் சொல்லப்படுவதை பற்றி மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இ-சிகரெட்டில், சாதாரண சிகரெட்டில் இருப்பது போல நிக்கோட்டின் இருப்பது இல்லை. ஆனால் ஆவியாகும் கரிம சேர்மங்கள் கன உலோகங்கள் மற்றும் அதிநுண் துகள்கள் அடங்கிய இ-சிகரெட்டில் அழுத்தப்பட்ட நிராவி வடிவில் நிகோட்டின் பயன்படுத்தப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி