செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் இந்திய கடற்படைக்கு புதிய போர்க்கப்பல்!…

இந்திய கடற்படைக்கு புதிய போர்க்கப்பல்!…

இந்திய கடற்படைக்கு புதிய போர்க்கப்பல்!… post thumbnail image
மும்பை:-இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக புதிதாக போர்க்கப்பல் ஒன்றை கடற்படையில் இணைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, மும்பை மஜ்காவ் துறைமுகத்தில் நேற்று நடந்த பிரமாண்ட விழாவில் கொல்கத்தா பிரிவு போர்க்கப்பல் ஒன்றை கடற்படை தளபதி ஆர்.கே.தோவனின் மனைவி மினு தோவன் தொடங்கி வைத்தார்.

கடற்படை உயர் அதிகாரிகள் மற்றும் மஜ்காவ் துறைமுக கழக அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்றனர். பி15-பி திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்ட முதல் போர்க்கப்பல் இதுவே ஆகும். முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த கப்பல், 3 ஆயிரம் டன் எடையும், 163 மீட்டர் நீளமும் உடையது. ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் நவீனரக ஆயுதங்கள், சென்சார் (உணர்கருவி), மேம்பட்ட செயல் தகவல் அமைப்பு மற்றும் அதிநவீன மின்விநியோக அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த கப்பலில் இடம்பெற்று உள்ளன. மேலும், இந்த கப்பலுக்கு ‘ஐ.என்.எஸ்.விசாகப்பட்டினம்’ என்று பெயரிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 2018-ம் ஆண்டுக்குள் இந்த போர்க்கப்பல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி