மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம்!…

விளம்பரங்கள்

மும்பை:-ஐ.பி.எல். சீசன்-8 கிரிக்கெட் திருவிழா இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 8-ந்தேதி தொடங்கிய இந்த திருவிழாவின் 19-வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் பெங்களூர் அணியை 18 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. அந்த ஐ.பி.எல். போட்டியில் தொடர்ச்சியாக 4 தோல்விகளை கண்ட மும்பை அணிக்கு இது முதல் வெற்றியாகும். இந்த போட்டியில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியது தெரிய வந்தது. இதனால் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சீசனில் விதிக்கப்படும் முதல் அபராதம் இதுவாகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: