‘புலி’ படத்தில் வேட்டைக்காரனாக வரும் நடிகர் விஜய்?…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பை சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைந்து படமாக்கினர். தற்போது, ஆந்திரா அருகே தலக்கோணம் காட்டுப் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது விஜய் வேட்டைக்காரன் மாதிரியான உடையணிந்து நடந்து வரும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தலக்கோணம் பகுதியில் ஏப்ரல் இறுதி வரை படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கின்றனர். இதற்கு பிறகு சீனா அல்லது கம்போடியாவில் 4 பாடல்களை படமாக்கவுள்ளனர். பேண்டசி படமாக உருவாகிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் ஹன்சிகா இளவரசி வேடத்திலும், சுருதிஹாசன் மாடர்ன் பெண்ணாகவும் வருவதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: