ஜெயம் ரவிக்கு ஜோடியானார் நடிகை லட்சுமிமேனன்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களை இயக்கியவர் சக்திராஜன். தற்போது சக்திராஜன், ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

லட்சுமிமேனன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘கொம்பன்’. இப்படத்திற்கு பிறகு எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். பிளஸ் 2 பரீட்சை எழுதிக் கொண்டிருந்ததால் எந்த படங்களும் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். தற்போது பிளஸ் 2 பரீட்சை எழுதி முடித்துவிட்டதால் படங்களில் நடிக்க தீவிரம் காட்டி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: