இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி, கமல்?…

விளம்பரங்கள்

சென்னை:-ரஜினியும், கமலும் ‘அபூர்வராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘16 வயதினிலே’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்களில் இணைந்து நடித்தார்கள். மொத்தம் 12 படங்களில் சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு பிரிந்து விட்டார்கள். இருவரும் தனியாக நடித்து முன்னணி கதாநாயகர்களாக இன்னும் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் படத்துக்கான செலவு, இருவருக்குமான சம்பளம், வியாபாரம் போன்றவை காரணமாக அது நடக்கவில்லை.

தற்போது விஜய்யை வைத்து ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா பட நிறுவனம் ரஜினி, கமல் படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் இதற்கான முதல்கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. ரஜினியும், ஷங்கரும் மும்பையில் சந்தித்து கதை பற்றி விவாதித்துள்ளனர். இதில் ரஜினி கதாநாயகனாக நடிப்பார் என்றும் கமல் வில்லன் கேரக்டரை ஏற்பார் என்றும் செய்தி பரவி உள்ளது. இருவருக்கும் சமமான சம்பளம் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த கதை கமலுக்கும் பிடித்து போய்விட்டது என்கின்றனர். ஷங்கர் ஏற்கனவே ரஜினியை வைத்து ‘எந்திரன்’, ‘சிவாஜி’ படங்களை எடுத்தார். அடுத்து எந்திரன் 2–ம் பாகத்தை எடுக்கப்போகிறார் என்று கூறப்பட்டது. தற்போது அதை ஒத்தி வைத்துவிட்டு ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: