செய்திகள்,திரையுலகம் முடிவடைந்தது ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு!…

முடிவடைந்தது ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு!…

முடிவடைந்தது ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு!… post thumbnail image
சென்னை:-வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். பிரேம்ஜி அமரன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொண்டார்.

இப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திய படக்குழு தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளது. சமீபத்தில்தான் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்த படக்குழு, தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது. தற்போது, பின்னணி இசை கோர்ப்பு மற்றும் கிராபிக்ஸ் பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

வருகிற மே 15-ந் தேதி ‘மாஸ்’ படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். எனவே, படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முடித்துவிட்டு, விரைவில் ஆடியோவையும் வெளியிடவிருக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி