செய்திகள்,திரையுலகம் உடலை அழகுப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் நடிகை அக்ஷராஹாசன்!…

உடலை அழகுப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் நடிகை அக்ஷராஹாசன்!…

உடலை அழகுப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் நடிகை அக்ஷராஹாசன்!… post thumbnail image
சென்னை:-ஒரு வெற்றி இயக்குனராக ஆக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவிற்குள் வந்து இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் நடிகை அக்ஷரா ஹாசன். ஸ்ருதிஹாசனுடன் இணைந்து சினிமா விழாக்களுக்கு விசிட் அடித்ததால், ஆந்திராவை சேர்ந்த இயக்குனர்களின் கண் அக்ஷரா மீது விழுந்தது. ஆனால் அப்போது நடிக்க மறுத்த அக்ஷரா, ஷமிதாப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது நடிக்க மறுக்க முடியவில்லையாம்.

இயக்குனர் ஆகவேண்டும் என்ற ஆசையில் இருந்த அக்ஷரா திடீரென நடிகையாக மாறியதை அடுத்து தொடர்ந்து ஸ்ருதிஹாசனை போல நடிகையாக நடிக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.
எனவே தன்னுடைய உடை மற்றும் சிகை அலங்காரங்களை மாற்ற பிரத்யேகமாக ஒரு உடற்பயிற்சி நிபுணரை நியமித்திருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி