செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் நாசா அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கியது!…

நாசா அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கியது!…

நாசா அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கியது!… post thumbnail image
வாஷிங்டன்:-பூமியின் மிக அருகில் உள்ள கிரகம் புதன். இதன் மேற்பரப்பு குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா விண்வெளி மையம்’ மெசஞ்சர்’ என்ற விண்கலத்தை கடந்த 2004–ம் ஆண்டு அனுப்பியது. புதன் கிரகத்தின் நீள் வட்ட சுற்று பாதையை சென்றடைந்த ‘மெசஞ்சர்’ கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதன் நடவடிக்கைகளை மேர் லேண்ட் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக இயற்பியல் ஆய்வகத்தில் இருந்தபடியே ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர்.

‘மெசஞ்சர்’ விண்கலம் புதன் கிரகத்தை குறிப்பிட்ட கால கட்டத்தில் சுற்றி வர வேண்டும். அது பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இறுதியாக அதன் பணி முடிவடையும் நிலையில் கடந்த 2 வாரம் காலமாக அந்த விண்கலத்தில் இருந்து தகவல் எதுவும் தெரியவில்லை. கட்டுப்பாட்டு அறையின் கம்ப்யூட்டர் திரையிலும் தென்படவில்லை. எனவே அதன் நிலை குறித்து விஞ்ஞானிகள் மிக குழப்பம் அடைந்தனர் இந்நிலையல் மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

விண்கலத்தில் நிரப்பப்பட்டிருந்த ‘ஹீலியம்’ கியாஸ் தீர்ந்து விட்டதால் அது செயல்பாட்டை இழந்து மோதியிருக்கலாம் என கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து ‘மெசஞ்சர்’ விண்கலத்தின் பணி முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்ட நாளை விட அதிக நாள் பணியாற்றியுள்ளதால் ‘மெசஞ்சர்’ விண்கலத்தின் புதன் கிரக ஆய்வு திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி