பற்றி எரியும் ஏமன்: போரை நிறுத்த பான் கி மூன் வலியுறுத்தல்!…

விளம்பரங்கள்

வாஷிங்டன்:-சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் நாட்டில் தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் பல நகரங்கள் தீக்கிரையாகி வருகின்றன. இதையடுத்து மனித உயிர்களை காக்கும் வகையில் அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று ஐ. நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.

வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதிய கூட்டத்தில் கலந்துகொண்ட பான் கி மூன், மாநாட்டுக்கிடையே செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு பேசினார். மனித வாழ்க்கையை பாதுகாக்க நாம் உதவ வேண்டிய நேரமிது. அதற்கேற்ப உண்மையான அமைதி நிலவ வழிவகை செய்யவேண்டும் என்று மூன் அப்போது கூறினார். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மூன் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக ஏமனுக்கு ஐ.நா. அமைதி தூதராக இருந்த ஜமால் பெனோமர், ஹவுத்தி படையினருக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய தூதரை நியமிப்பதற்கான பணிகளில் தான் ஈடுபட்டு வருவதாகவும் மூன் தெரிவித்தார். ஏமனில் அரசியல் நடவடிக்கை துவங்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறிய மூன், ஏமன் மக்கள் அனைவரும் இதை புரிந்து கொண்டு, நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வுக்கு முன் வரவேண்டும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: