நடிகர் விஜய்யை இயக்கும் விஷால்!…

விளம்பரங்கள்

சென்னை:-தற்போது உள்ள நடிகர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் சாட் செய்வது வழக்கமாகி வருகிறது. இதன் மூலம் ரசிகர்களின் எண்ணத்தையும், மகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் ரசிகர்களுடன் கேள்வி, பதில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் விஷால் ரசிகர்களுடன் சாட் நடத்தியுள்ளார்.

இதில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு விஷால் பதிலளித்துள்ளார். அப்போது, ஒரே சமயத்தில் சங்கர் படத்தில் நடிக்கவும், விஜய் படத்தை இயக்கவும் வாய்ப்பு கிடைத்தால் எதை தேர்வு செய்வீர்கள்? என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, கடினமான தேர்வுதான், இருந்தாலும் நான் விஜய்யை வைத்து தான் இயக்க முடிவு செய்வேன் என்றார் விஷால். மேலும் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ மிகவும் பிடிக்கும் என்றிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: