கனடா குருத்வாரா கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை!…

விளம்பரங்கள்

வான்குவர்:-3 நாள் பயணமாக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இறுதி நாளான இன்று வான்குவரில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்கு சென்றார். முன்னதாக டொரண்டோவில் இருந்து வான்குவருக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் உடன் சென்றார். அங்கு சீக்கியர்களின் பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் ஆகியோர் தலையில் துணியால் கட்டியபடி கல்சா திவானில் பிரார்த்தனை செய்தனர்.

பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது, கனடாவில் வாழும் சீக்கியர்களின் கடும் உழைப்பால் இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது என்றார். குருநானக்கின் போதனைகளை நினைவு கூர்ந்த அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் சீக்கியர்களின் பங்கை போற்றினார். தியாகம், உழைப்பு மற்றும் மனிதாபிமானத்துக்கு சீக்கியர்கள் உதாரணமானவர்களாக திகழ்கின்றனர் என பாராட்டினார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் அங்குள்ள இந்துக்களின் லட்சுமி நாராயணன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அங்கு கூடியிருந்தவர்களிடையே நரேந்திரமோடி பேசினார்.

இந்துயிசம் ஒரு மதம் அல்ல. அது வாழ்வின்பாதை. இக்கருத்தை இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அதை நான் நம்புகிறேன். இந்து மதம் அறிவியல் வழியிலான வாழ்க்கையை போதிக்கிறது என்றார். மேலும் அவர் கூறும் போது, ஜூன் 21–ந்தேதியை உலக யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. யோகாவின் மனிதாபிமான பயன்பாடுகளை இந்தியர்கள் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.நேற்று டொரண்டோவில் ஏர் இந்தியா நினைவிடத்துக்கு சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: