செய்திகள்,திரையுலகம் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கும் நடிகர் விக்ரம்!…

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கும் நடிகர் விக்ரம்!…

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கும் நடிகர் விக்ரம்!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ திரைப்படத்தின் அமோக வெற்றிக்கு பிறகு நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ’10 எண்றதுக்குள்ள’. ‘கோலி சோடா’ பட புகழ் விஜய் மில்டன் இயக்கி வரும் இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க, பசுபதி, ஜாக்கி ஷெராப், மனோபாலா, சம்பூர்ணேஷ் பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நாளை ( ஏப்ரல் 17 ) விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு 12 மணி அளவில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதனால் விக்ரமின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி